கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கடனை கேட்டு தகாத வார்த்தையால் பேச்சு; தேமுதிக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை.. வீடியோ வெளியிட்டு சோகம்.!
நிதிநிறுவன அதிகாரிகளின் தொந்தரவால், தேமுதிக நிர்வாகி தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், கீழநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தசாமி. இவர் தேமுதிக நிர்வாகி ஆவார். கோவிந்தசாமியின் மனைவி பூங்கொடி. தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த 2019ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக கோவிந்தசாமி 2 நிதி நிறுவனங்களில் தனித்தனியே கடன் வாங்கியதாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: பேசி மயக்கிய கூலி தொழிலாளி... கர்ப்பமான 17 வயது சிறுமி.!! மீண்டும் ஒரு போக்சோ வழக்கு.!!
வட்டிக்கு வட்டி
கடனுக்கான தவணையை முறைப்படி கோவிந்தசாமி செலுத்தி வந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட முடக்கத்தால் சரிவர கடனை செலுத்த இயலவில்லை. இதனால் நிதிநிறுவனம் வட்டிக்கு வட்டி போட்டு கூடுதல் பணம் செலுத்தக்கூறி தொந்தரவு செய்துள்ளனர். செல்போனிலும், நேரிலும் வந்து மிரட்டல் தொடர்ந்துள்ளது.
மனஉளைச்சல்
இதற்குள் கோவிந்தசாமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால், அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் கடனை திரும்ப கேட்டு தொந்தரவு செய்த நிதிநிறுவன அதிகாரிகள், தகாத வார்த்தையால் பேசி திட்டி இருக்கின்றனர். இதனால் மனமுடைந்துபோன கோவிந்தசாமி, விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் 6 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் இருதரப்பையும் நேரில் அழைத்து சமாதானம் செய்துள்ளனர்.
தற்கொலை
இதற்குப் பின்னரும் நிதிநிறுவன அதிகாரிகள் வீட்டிற்கு சென்று அழுத்தம் கொடுக்க, கோவிந்தசாமி மனமுடைந்து யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்.13 அன்று அவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட குடும்பத்தினர், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு கோவிந்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வாக்குமூல வீடியோ
தனது மரணத்திற்கு முன்பு கோவிந்தசாமி தற்கொலை குறித்து வீடியோ எடுத்து வெளியிட்டு விஷம் குடித்துள்ளார். இந்த வீடியோவில், "தனியார் நிறுவனத்தில் குடும்ப சூழலால் கடன் வாங்கினேன். கொரோனா காலத்தில் பணம் செலுத்த இயலாமல் சென்று, தற்போது அதிக பணம் கேட்கிறார்கள். வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் எனக்கு மூளையில் கட்டி இருக்கிறது. கடனை செலுத்த இயலாமல் தவிக்கிறேன். என் குடும்பத்தை காப்பாற்றுங்கள்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தீபாவளி புத்தாடை விவகாரம்.!! தற்கொலை செய்து கொண்ட 26 வயது இளைஞர்.!!