தீபாவளி புத்தாடை விவகாரம்.!! தற்கொலை செய்து கொண்ட 26 வயது இளைஞர்.!!
புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு புது துணி வாங்குவது தொடர்பாக கணவன் மற்றும் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை
தீபத்திருநாளான தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பிரதானமானது. இந்த வருடத்திற்கான தீபாவளி பண்டிகை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி தினத்தன்று புத்தாண்டை அணிந்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது மரபாகும். தீபாவளிக்கு கடன் வாங்கியாவது புத்தாடைகள் எடுப்பதை பலரும் சம்பிரதாயமாக கொண்டிருக்கின்றனர்.
தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்குவது தொடர்பாக தகராறு
புதுச்சேரி மாநிலம் சித்தன்குடி பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் என்ற 26 வயது வாலிபர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகிய நிலையில் தீபாவளிக்கு புத்தாடை எடுப்பது தொடர்பாக கணவன் மற்றும் மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு ஒரு சில நாட்கள் நீடித்ததாகவும் தெரிகிறது. இதனால் நரசிம்மன் கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க: சென்னை ஐடி பெண் கத்தி முனையில் பலாத்காரம்.!! ஆட்டோ டிரைவர் தலைமறைவு.!!
தூக்கு போட்டு தற்கொலை
மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து மன விரக்தியில் இருந்த நரசிம்மன் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த நரசிம்மன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளிக்கு புது துணி எடுப்பது தொடர்பான தகராறில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: மணமேடையிலேயே அதகளம் செய்த மணமகன்; கட்டுப்படுத்த முடியாமல் தவித்த மணப்பெண்.. என்னவொரு ஆனந்தம்.!