கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சென்னையில் உள்ள எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சீல்; உணவுப்பாதுகாப்புத்துறை அதிரடி.!
சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த கிளையிலிருந்து, சென்னையில் இருக்கும் பல்வேறு கிளைகளுக்கு மொத்தமாக பிரியாணி சமைத்து வழங்கப்படுகிறது.
இதனிடையே, சமீபத்தில் கொடுங்கையூர் பகுதியில் செயல்படும் எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில், பிரியாணி சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட முண்டியடித்த கூட்டத்தால் பரபரப்பு; திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பகீர்.!
உணவுப்பாதுகாப்புத்துறை ஆய்வு
அதேபோல, பொன்னேரி பகுதியில் செயல்படும் அதே கிளையில் பிரியாணி சாப்பிட்ட 10 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இன்று காலை முதலாகவே எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் உணவுப்பாதுகாப்புத்துறை ஆய்வு மேற்கொண்டது.
இந்நிலையில், கொடுங்கையூரில் இருக்கும் எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைக்கு இன்று காலை சீல் வைக்கப்பட்ட நிலையில், பொன்னேரியில் செயல்பட்டு வரும் அதன் கிளைக்கும் சீல் வைக்கப்பட்டது.
தரமற்ற முறையில் உணவுகள் தயார் செய்யப்பட்டதாக உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்... துண்டு துண்டாக வெட்டி பாலியல் தொழிலாளி படுகொலை.!! அதிர்ச்சி வாக்குமூலம்.!!