கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பிரியாணி சாப்பிட முண்டியடித்த கூட்டத்தால் பரபரப்பு; திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பகீர்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூரில், திமுக உறுப்பினர்கள் கூட்டமானது இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகளுடன், நகர, ஊராட்சி உட்பட பல்வேறு திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் மூத்த தலைவர்கள் உரைகளை கேட்டு, மக்கள் செயல்பாடுகளை தீவிரப்படுத்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பிற விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கீரனூர் பகுதியில் நடைபெற்ற திமுக வடக்கு மாவட்ட பொதுஉறுப்பினர்கள் கூட்டம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட நபர்களுக்கு சாப்பிட உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. இதனிடையே, பிரியாணியை சாப்பிட பலரும் திடீரென ஒரே நேரத்தில் முண்டியடித்த காரணத்தால், அங்கு கூட்டநெரிசல் மற்றும் பரபரப்பு உண்டானது.
முண்டியடித்த கூட்டம்
#OCBriyani😂 || புதுக்கோட்டை திமுக ஆலோசனை கூட்டத்தில் பிரியாணிக்காக தள்ளுமுள்ளில் சிக்கி 2 பேர் மயக்கம்... pic.twitter.com/4ZEebFl9xO
— TRT Shankar (@Trtshankar) September 4, 2024
இதையும் படிங்க: திமுக கொடிகட்டிய காரில் அதிவேகம், அலப்பறை.. அபராதம் விதித்து ஆப்படித்த காவல்துறை.!
ஒருசிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தாலும், அவர்கள் மீது ஏறி பிரியாணி சாப்பிட சென்றனர். நிகழ்விடத்தில் இருந்த காவலர்கள், உடனடியாக கீழே விழுந்தோரை மீட்டனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருசிலர் மயங்கிய நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதி செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: நீச்சல் குளத்தில் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்; 3 வயது சிறுவன் பரிதாப பலி.!