கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சென்னை: சிலிண்டர் டியூப்பால் வந்த வினை; இளம்பெண் பலி.. இல்லத்தரசிகளே கவனம்.!
சிலிண்டர் டியூப் சரியாக பொறுத்தப்படாத காரணத்தால் தீ விபத்தில் சிக்கி ஆசிரியை உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள மடிப்பாக்கம், குபேரன் நகர் பகுதியில் வசித்து வருபவர் வின்சி ப்ளோரா. இவர் சேலம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். தற்போது சென்னையில் தங்கியிருந்து பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
இதையும் படிங்க: 9 மாத கைக்குழந்தை, பெண் உட்பட 3 பேர் பலி; திருப்பூரில் பயங்கரம்.. பட்டாசு வெடித்துச் சிதறி சோகம்.!
இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வீட்டில் இருந்த சிலிண்டர் தீர்ந்துவிடவே, சக பணியாளராக மணிகண்டனை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து, தனது வீட்டில் கூடுதலாக இருந்த சிலிண்டரை மணிகண்டன் வின்சி வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.
திடீர் தீ விபத்து
அங்கு சிலிண்டரை அடுப்புடன் பொருத்திவிட்டு, சோதனை முயற்சியாக அடுப்பை பற்றவைத்து சரி பார்த்ததாக தெரியவருகிறது. அச்சமயம் திடீரென கியாஸ் வெளியேறி இருவரின் மீது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வின்சி 55% தீக்காயத்தால் பாதிக்கப்பட்டார்.
மணிகண்டன் 40 % தீக்காயத்துடன் உயிருக்கு அலறித்துடித்தார். இருவரையும் மீட்ட பொதுமக்கள், உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், முதற்கட்ட தடயங்களை சேகரித்து விசாரணையை முன்னெடுத்தனர்.
ஆசிரியை பலி
இந்நிலையில், வின்சி நேற்று இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணிகண்டனின் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கு கியாஸ் டியூபை சரிவர பொறுத்ததே காரணம் என தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் கியாஸ் சிலிண்டர் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், அதனை சரிவர பொருத்தி செயல்படுவது இவ்வாறான விபத்துகளை தவிர்க்க உதவும். ஒரு சிறிய அலட்சியமும் இதுபோன்ற துயரத்திற்கு வழிவகை செய்யும் என்பதை கவனத்துடன் எடுத்துக்கொள்ளவும்.
இதையும் படிங்க: லாரி சக்கரத்தில் சிக்கி தலையில்லாமல் வந்த மகளின் உடல்; இறுதி அஞ்சலியை மனம்நொந்து போட்டோ வைத்து நிறைவேற்றிய குடும்பத்தினர்.!