லாரி சக்கரத்தில் சிக்கி தலையில்லாமல் வந்த மகளின் உடல்; இறுதி அஞ்சலியை மனம்நொந்து போட்டோ வைத்து நிறைவேற்றிய குடும்பத்தினர்.!
விபத்தில் சிக்கிய மகள் தலையில்லாத சடலமாக வீட்டிற்கு வர, பெற்ற மனம் குமுறி மகளின் புகைப்படத்தை தலை இருக்கும் இடத்தில் பொருத்தி பெற்றோர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் கண்ணீரை வரவழைக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிசிப் பெரியாங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் நித்யா (வயது 26). இவரின் தோழி ஹரிணி (வயது 26). இருவரும் சென்னை சோளிங்கநல்லூரில் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் பல்லாவரம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அச்சமயம், வேளச்சேரி உள்வட்டச் சாலையில், பின்னால் வந்துகொண்டு இருந்த மினிலாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சாலையில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இதையும் படிங்க: பிரசவத்திற்கு மருத்துவமனை சென்ற பெண் பரிதாப பலி; விருத்தாசலத்தில் சோகம்.!
விபத்தில் பெண் தலை சிதைந்து மரணம்
இவர்களில் ஸ்கூட்டியில் பின்னால் இருந்த நித்யா தலைக்கவசம் அணிந்தபோதிலும், அவரின் தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த சம்பவத்தில் தலை சிதைந்து பெண் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துபோனார். ஹரிணி லேசான காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
லாரி ஓட்டுநர் கைது
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், நித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஹரிணியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அதனைத்தொடர்ந்து, லாரி ஓட்டுநராக ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் (வயது 21) கைது செய்யப்பட்டார்.
புகைப்படம் வைத்து நல்லடக்கம்
பிரேத பரிசோதனைக்கு பின்னர் நித்யாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊர் கொண்டு வபட்டது. அங்கு விபத்தில் பலியான நித்யாவின் தலை சிதைந்துபோன காரணத்தால், தலை இருக்கும் இடத்தில் நித்யாவின் புகைப்படத்தை வைத்து உடலுக்கான அஞ்சலியை செலுத்தி குடும்பத்தினர் நல்லடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 7 மாத கைக்குழந்தை என்றும் பாராது போதையில் தகப்பன் செய்த பயங்கரம்.. கேடுகெட்ட குடியால் சிறைவாசம்.!