கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஆசையாக தங்க நகை கேட்ட மனைவி.. பக்கத்துவீட்டு பெண்ணின் கழுத்தில் கைவைத்த இளைஞன்.. தாம்பரத்தில் பகீர்.!
மனைவியின் ஆசையை நிறைவேற்ற திருடனாக மாறி, நகையை பறித்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் தாம்பரத்தில் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள தாம்பரம், முல்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் பரமேஸ்வரி. இவர் தனது கணவருடன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் குடியிருப்பில், ராம் மிலன் என்ற நபர் தனது மனைவி, 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
மனைவியின் ஆசை
தற்போது ராம் மிலனின் குழந்தைகள், மனைவி உத்திரபிரதேசத்தில் இருக்கும் நிலையில், பணிசூழல் காரணமாக ராம் தனது சகோதரருடன் தங்கி இருக்கிறார். இதனிடையே, ராமின் மனைவி தனக்கு தங்க சங்கிலி அணிய விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார். முடிந்தால் சங்கிலியை வாங்கி வருமாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சற்றுமுன்: சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை 12 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.!
திருட்டுக்கு முடிவெடுத்த கணவர்
இதனால் மனைவியின் ஆசையை நிறைவேற்ற முயன்ற ராம், தனது வீட்டருகே வசித்து வரும் பரமேஸ்வரியின் நகைகளை பறித்துச் செல்ல முற்பட்டுள்ளார். இதற்காக முன்னதாகவே திட்டமிட்டு, இரயில் டிக்கெட்களையும் வாங்கி இருக்கிறார்.
கையும்-களவுமாக சிக்கினார்
ஊருக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தவர், பரமேஸ்வரியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி நகையை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராமை விரட்டிச் சென்று பிடித்தனர்.
சிறையில் அடைப்பு
இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ராமை கைது செய்தனர். மனைவியின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய கணவர், திருட்டு என்ற வழியை தேர்வு செய்ததன் காரணமாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: மக்களே ரெடியா? வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!