7 மாத கைக்குழந்தை என்றும் பாராது போதையில் தகப்பன் செய்த பயங்கரம்.. கேடுகெட்ட குடியால் சிறைவாசம்.!
போதை ஒவ்வொரு வீட்டின் நிம்மதியையும், எதிர்காலத்தையும் சீர்குலைகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம், கஸ்பா தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கம். இவரின் மகன் கேசவன், கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.
கேசவனின் மனைவி செம்பருத்தி. தம்பதிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவருக்கும் 7 வயதுடைய பெண் குழந்தை, 5 மாத கைக்குழந்தை என 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: 20 தீட்சகர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட விசிக நிர்வாகி; சிதம்பரத்தில் பகீர்.. போராட்டம்.!
மதுப்பழக்கம் கொண்டிருந்த கேசவன், அவ்வப்போது போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த அக்.9 அன்று கேசவன் போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
கேசவன் கைது
அங்கு உறங்கிக்கொண்டு இருந்த தனது மனைவி, 7 வயது குழந்தை, கைக்குழந்தை ஆகியோரை கொடூரமாக தாக்கி இருக்கிறார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தாய், குழந்தைகளை பாதுகாத்துள்ளனர்.
இந்த விஷயம் குறித்து சேம்பருத்தி ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இன்று கேசவன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் சரக்கில் செத்துக்கிடந்த பல்லி.. கட்டிங் அடித்து உயிர் பயத்தில் அலறிய நபர்.. திட்டக்குடியில் சம்பவம்.!