கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சோகம்; இளைஞர் பரிதாப பலி.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, தொண்டன்குறிச்சி ஊராட்சியில் வசித்து வருபவர் செல்வகுமார் (வயது 20). இவர் கடந்த செப்.10 அன்று, காலை 8 மணியளவில், திட்டக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.
அதிவேகத்தில் வந்த கார்
இவர் சேலம் - விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில், என். நாரையூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டு இருந்தார். அச்சமயம், பின்னால் அதிவேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: அருப்புக்கோட்டை: கார் - டூவீலர் மோதி பயங்கர விபத்து; எலக்ட்ரீசியன் பரிதாப பலி.!
இளைஞர் பரிதாப பலி
இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த செல்வகுமார், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த வேப்பூர் காவல்துறையினர், செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கார் - இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து; ஒருவர் பரிதாப பலி.!