கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
60 வயதில் தேவையா இதெல்லாம்?.. திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல்; கிழவனின் கதைமுடித்த கணவன்.!
கரூர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (60). இவர் வசித்து வந்த பகுதியில் திருமணமான பெண் ஒருவர் கணவருடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனால் பெண்மணி அவ்வப்போது முதியவருடன் தனிமையில் சந்தித்து வந்துள்ளார். கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இவ்விவகாரம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் காசிநாதனை கண்டித்து இருக்கிறார்.
கள்ளக்காதலில் நாட்டம்
கண்டிப்புகளை ஏற்றுக்கொள்ளாத முதியவர், தொடர்ந்து கள்ளக்காதலில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஒருகட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து முதியவரை வெட்டிக்கொலை செய்தார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடையூறு.. 4 வயது குழந்தைக்கு தாய் செய்த கொடுமை.. பரிதாப பலி.!
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பெண்ணின் கணவரை கைது செய்தனர். அவரின் நண்பர்களுக்கு வலைவீசப்பட்டுள்ள்ளது.
இதையும் படிங்க: காதில் சீல் வடிந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்? விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!