கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
முதல் கள்ளகாதலனின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டாவது கள்ளக்காதலன்; எஸ்கேப் ஆன டோலி.. மதுரையில் பகீர்.!
கள்ளக்காதலியின் வீட்டில் கள்ளக்காதலர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, கண்ணனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜா. புட்லாடப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வள்ளி. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதல் மோகம்.. கணவரை கொன்றுதூக்கிய மனைவி.. திருமணத்திற்கு முந்தைய காதலால் விபரீதம்.!
இதனையடுத்து, இருவரும் மதுரை செக்கானூரணி பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர். வள்ளி கட்டிட வேலைக்கு சென்று வந்த நிலையில், ராஜா தேநீர் கடையில் கூலித் தொழிலாளியாக சென்று வந்துள்ளார்.
கள்ளக்காதல்கள் உல்லாசம்
இதனிடையே, வள்ளிக்கும், கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த கீழ்ப்பட்டி செல்வத்திற்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால் ராஜா வீட்டில் இல்லாத நேரத்தில் வள்ளி, செல்வத்துடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவுநேர பணிக்குச் சென்ற ராஜா, மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது செல்வம் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ந்துபோன ராஜா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வள்ளியை தேடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: சகோதரியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ரௌடியை சரமாரியாக வெட்டிக்கொண்ட சகோதரர்; திருச்சியில் சம்பவம்.!