கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கொல்லிமலைக்கு சுற்றுலா அழைத்துச்சென்று, 16 வயது சிறுமி பலாத்காரம்; காதலனுக்கு ஜிங்., சக் போட்ட நட்புகள்.!
படிக்கும் வயதில் பருவக் காதலை நம்பி கொல்லிமலை சுற்றுலா சென்ற சிறுமி, காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் வீரமணி (வயது 22). இவர் சேலம் நகர பகுதியில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இவர், அப்பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். சிறுமி பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இதையும் படிங்க: அம்மா, அப்பா, அண்ணன்.. 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. சென்னையில் பேரதிர்ச்சி.!
கொல்லிமலை சுற்றுலா
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சிறுமி பள்ளிக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர், வீரமணியுடன் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். வீரமணி சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நிலையில், வீரமணியின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் கவியரசன் (வயது 20), அக்பர் (வயது 20) ஆகியோரும் இணைந்துகொண்டுள்ளனர்.
விடுதியில் பலாத்காரம்
இவர்கள் கொல்லிமலைக்கு சென்று பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த நிலையில், கொல்லிமலையில் அறையெடுத்து வீரமணியுடன் மாணவி தங்கி இருக்கிறார். பின் இருசக்கர வாகனத்தில் மாணவியை அழைத்துவந்து வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். இந்த தகவலை அறிந்த மாணவியின் பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது வீரமணி தன்னை கொல்லிமலைக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்வதாக உறுதியளித்து அத்துமீறியதாக கூறியுள்ளார்.
போக்ஸோவில் கைது
இதனால் அதிர்ந்துபோன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையாவூதிடர்ந்து வீரமணி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கவியரசர், அக்பர் ஆகியோரும் போக்ஸோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
மாணவி மருத்துவ பரிசோதனைக்குப்பின்னர், அஸ்தம்பட்டியில் செயல்பட்டு வரும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: "கல்யாணம் பண்ண சொன்னா வீடு புகுந்து.." மிரட்டிய இளைஞன்.! தட்டி தூக்கிய காவல் துறை.!!