கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மானாமதுரை: ஆண் நண்பருடன் இருந்த பெண் ஐவர் கும்பலால் கற்பழிப்பு; 2 காமுகன்களுக்கு மாவுக்கட்டு.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், சம்பவத்தன்று தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அச்சமயம், அப்பகுதியை சேர்ந்த ஐந்து பேர் கும்பல் ஒன்று வந்துள்ளது.
ஆண்-பெண் தனியாக இருப்பதை தனக்கு சாதகமாக்கிய கும்பல், ஆண் நபரை கடுமையாக தாக்கி இருக்கிறது. பெண்ணை காட்டுப்பகுதிக்குள் தூக்கிச்சென்று கட்டாயப்படுத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பயங்கரம்... இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.!! 5 நபர்களுக்கு வலைவீச்சு.!!
ஐவர் கும்பல் கைது
இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெண்ணின் ஆண் நண்பரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வில்வகுமார், முத்துக்குமார், ராமசாமி, அஜய் குமார், தவமுனியசாமி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் வில்வகுமார், முத்துக்குமார் ஆகியோர் கைது நடவடிக்கையின்போது தப்பிச்செல்ல முயன்று கீழே விழுந்தனர்.
இதனால் அவர்களுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்படவே, அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 4 பேர் கும்பலால் 18 வயது கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; திருச்சியில் அதிர்ச்சி.. தாய்-மகள் குமுறல்.!