கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
4 பேர் கும்பலால் 18 வயது கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; திருச்சியில் அதிர்ச்சி.. தாய்-மகள் குமுறல்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் தன்னை அமைச்சர் ஒருவரின் கார் ஓட்டுனர் என்று கூறி சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, அப்பகுதியை சார்ந்த 18 வயது ஐடிஐ கல்லூரி மாணவி ஒருவரை, நான்கு பேர் கும்பலுடன் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம்
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தாயார் கூறுகையில், "அமைச்சர் ஒருவரிடம் கார் ஓட்டுனராக பணியாற்றி வரும் சிலம்பரசன் என்பவர், தன்னை 4 பேர் கும்பலுடன் சேர்ந்து, பலமுறை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தனர். 3 முறை இந்த துயரம் நடந்தது. வீடு, தோட்டம் என அழைத்துச்சென்று வன்கொடுமை செய்தார்கள்.
இதையும் படிங்க: காவேரி ஆற்றில் குளிக்கச்சென்ற சிறுவன் சடலமாக வீடுதிரும்பிய சோகம்.. ஆனந்த குளியலில் நடந்த துயரம்.!
கருக்கலைப்பு மாத்திரை
ஒருகட்டத்தில் அவர்களின் கொடுமை தாங்காமல், அவரது ஆசைக்கு இணங்க மறுத்தபோது, அந்தரங்க வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், அதனை சமூகநீதத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டி, என்னை வற்புறுத்தினார். இதனால் நான் கர்ப்பமான நிலையில், கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்தவர், அங்கிருந்து சென்று விட்டார். இது தொடர்பாக எனக்கு மிரட்டல்கள் வருகிறது.
இதனால் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, எனது வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என கூறி இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
வீடியோ நன்றி
மாணவியை கூட்டுப்பாலியல் செய்த அமைச்சரின் ஓட்டுநர்...#trichy | #collegestudent | #teenagegirl | #harassment | #HarassmentCase | #dmkgovt | #dmkminister | #ministeranbilmagesh | #anbilmaheshpoyyamozhi | #cardriver | #newsj pic.twitter.com/JnGUmrvaQb
— NewsJ (@NewsJTamil) September 10, 2024
இதையும் படிங்க: பள்ளி மாணவிகளை சீரழித்த மருத்துவர்; முறுக்கிக்கொண்டு செய்தியாளர்கள் மீது பாய்ச்சல்.!