கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சிவகங்கை: 13 வயது சிறுமி பலாத்காரம்.. வழக்குக்கு பயந்து கிணற்றில் தள்ளிவிட்டு கொலை..!
குடும்பத்திடம் நல்லவர்போல பழகிய காமக்கொடூரன், 13 வயது சிறுமியை சீரழித்து கொலை செய்த பயங்கரம் சிவகங்கையில் அடைந்துள்ளது.
சடலம் மீட்பு
சிவகங்கை மாவட்டம், கல்குளத்தில் இருக்கும் கம்புத்தோட்ட கிணற்றில் 13 வயதுடைய சிறுமியின் சடலம் மிதப்பதாக, தோட்டத்தின் உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அக்.24 அன்று சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
இதையும் படிங்க: நிலத்தகராறில் பயங்கரம்.. காரைக்குடி மேயரின் கொலை மிரட்டல்.. அதிர்ச்சி ஆடியோ வைரல்.!
பலாத்காரம் & கொலை
இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தியபோது, சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை நடந்தது அம்பலமானது. இதனையடுத்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்துகையில், சிறுமியை இளையான்குடி சாலையில் பைக்கில் ஒருவர் அழைத்துச்சென்றது தெரியவந்தது.
32 வயது இளைஞர் கைது
இதன்பேரில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, வாலங்கோட்டை பகுதியில் வசித்து வந்த சதிஷ் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தடயத்தை சேகரிக்க, விசாரணைக்காக தோட்டத்திற்கு அழைத்துச்சென்றபோது, தப்பிச்செல்ல முயன்று தடுக்கி விழுந்து கால்களை முறித்துக்கொண்டார். இதனால் அவரின் கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டது.
போக்ஸோவில் கைதான குற்றவாளி
சதீஷிடம் நடந்த விசாரணையில் சித்தியை கொலை செய்தது, 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது என 9 வழக்குகளில் சிக்கியுள்ள அவர், பாலியல் வழக்கில் கைதாகி 8 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இதனிடையே, சதிஷ் மனைவி பிரசவத்திற்கு மதுரையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு தனது மனைவியுடன், சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயும் இரண்டாவது பிரசவத்திற்கு அனுமதியாகியுள்ளார்.
உதவுவதுபோல நடித்து சோகம்
சிறுமியின் குடும்பத்திற்கு உதவி செய்வதுபோல நடித்த சதிஷ், சிறுமியுடன் நெருங்கிப்பழகி, அக்.24 அன்று தனது சொந்த கிராமமான கல்குளத்திற்கு அழைத்து வந்தவர், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின் சிறுமி இதுகுறித்து வெளியே கூறினால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்படலாம் என உணர்ந்தவர், சிறுமியை கிணற்றில் தள்ளி கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்ணின் காதை அறுத்து கம்மல் திருட்டு; ஒரே வீட்டில் இரண்டு முறை கொள்ளை.. திருட்டுச் சம்பவத்தால் குடும்பமே அதிர்ச்சி.!