கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
குளத்தின் சீரமைப்பு பணிகளில் தரமற்ற கற்கள்? ஒப்பந்ததாரரை கடிந்துகொண்ட கனிமொழி எம்பி.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், கஸ்பா குளத்தை சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தப்படும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
கற்கள் தூரமில்லை
இதனிடையே, நேற்று திமுக மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கஸ்பா குளத்தில் நடக்கும் சீரமைப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, குளத்தில் சீரமைப்பு பணிக்கு கொண்டு வந்த கற்கள் தரமானதாக இல்லை.
இதையும் படிங்க: பூட்டிக்கிடக்கும் வீடுகள் டார்கெட்; தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் சிக்கியது எப்படி?.!
களத்தில் ஆய்வுப்பணிகளை நேரில் மேற்கொண்ட எம்பி
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட வசவப்பபுரம் குட்டைக்கால் குளம், சென்னல்பட்டி முக்கவர் கால்வாய் மற்றும் பாலம், மருதூர் அணைக்கட்டு, வல்லநாடு - மணக்கரை கீழக்கால் கண்மாய், ஆழ்வார்கற்குளம் - தோழப்பன்பண்ணை கீழக்கால் கண்மாய்,… pic.twitter.com/BTPAZciGdD
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 22, 2024
கடிந்துகொண்ட எம்.பி
இதனை கவனித்த கனிமொழி, ஒப்பந்ததாரரை கடிந்துகொண்டார். கற்களை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தி இருந்தார். கனிமொழியின் அடுத்தடுத்த கேள்வியால் பதில் சொல்ல இயலாமல் திணறிய ஒப்பந்ததாரர், மௌனம் காத்தபடி இருந்தார்.
“என்ன இந்த கல் நல்லா இருக்கா.. அப்போ போய் ஒரு கல் எடுத்துட்டு வாங்க நான் கார்ல வெச்சிக்கிற..” கேள்விகளால் துளைத்தெடுத்த கனிமொழி.. பதில் சொல்ல முடியாமல் திருதிருவென முழித்த ஒப்பந்ததாரர்.. கற்களை ஆய்வுக்காகவும் எடுத்துச் சென்றார்…#Thoothukudi | #DMK | #KanimozhiMP | #Inspection |… pic.twitter.com/6nUqf5fLQG
— Polimer News (@polimernews) October 23, 2024
வீடியோ நன்றிpalimar தொலைக்காட்சி
இதையும் படிங்க: "கனிமொழி எம்.பி. பி.ஏ. யாருண்ணே தெரியாது" - போதை தெளிந்ததும் அடாவடி யூத் அப்ரூவர்.!