கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"கனிமொழி எம்.பி. பி.ஏ. யாருண்ணே தெரியாது" - போதை தெளிந்ததும் அடாவடி யூத் அப்ரூவர்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம், 100 அடி சாலையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி பயணம் செய்த கார் ஒன்று, தாறுமாறாக வந்தது.
இதனால் காரை நிறுத்திய அதிகாரிகள், காரில் வந்தவர்களிடம் விசாரித்தனர். போதையில் இருந்த இளைஞர்கள், காரில் இருந்து இறங்க மறுத்து அடாவடி செய்தனர். மேலும், வாக்குவாதத்தில் தான் திமுக எம்.பி கனிமொழியின் பி.ஏ தம்பி, நாங்கள் வருகை தந்த காரும் அவருடையதே என மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: #Breaking: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி.!
"கனிமொழி எம்.பி. பி.ஏ. யாருண்ணே தெரியாது...!"
— Raja Shanmugasundaram (@SRajaJourno) October 3, 2024
கோவையில் மதுபோதையில் தான் கனிமொழி எம்.பி. பி.ஏவின் தம்பி என போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் வாக்குமூலம்! pic.twitter.com/kWkFMLb6Rw
இந்த விசயம் குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் கிரண் (வயது 25), பாலாஜி (வயது 27), சிவானந்தம் (வயது 24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணைக்குப்பின்னர் இவர்களுக்கும் - எம்.பி பி.ஏவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது அம்பலமானது. இதனால் இளைஞர்கள் தங்களின் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: #Breaking: திமுக பிரமுகர் அடித்துக் கொலை?.. இரத்த வெள்ளத்துடன் மீட்கப்பட்ட சடலம்.. குடும்பத்தினர் சோகம்.!