தனியார் பேருந்து - டூவீலர் மோதி பயங்கரம்... நொடியில் பறிபோன கல்லூரி மாணவி உயிர்.! அலறிய பயணிகள்., பதறவைக்கும் காட்சிகள்.!
தங்கையை பள்ளிக்கு வழியனுப்பி வைக்க வந்த அக்கா, சாலை விபத்தில் உயிரிழந்த சோகம் நெல்லையில் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர், இராமையன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பால் துரை. இவரின் மூன்றாவது மகள் செல்வம், பாளையங்கோட்டை மகளிர் கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கிறார்.
இதையும் படிங்க: பெண் காவலர்கள் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்; நடந்தது என்ன? வெளியான ஆடியோ.!
இன்று காலை 7 மணியளவில், இளைய சகோதரியை பள்ளிக்கு செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். பின் சாலையை கடந்து செல்ல முற்பட்டார்.
குறுக்கே வந்த பேருந்தால் பதற்றத்தில் சோகம்
அப்போது, சங்கரன்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி பயணித்த தனியார் பேருந்து, எதிர்திசையில் முந்திச் சென்று பயணித்தது. இதனை சற்றும் எதிர்பாராத செல்வம், வாகனத்தை மேற்படி இயக்கியுள்ளார்.
இதனால் அவரின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மானூர் போலீசார், செல்வத்தின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கவனக்குறைவாக வாகனம் இயக்கி சோகம்
நெல்லை இராமையன்பட்டி அருகே கவனக் குறைவாக பைக்கை ஓட்டியதால், பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு; அதிர்ச்சி சிசிடிவி#Accident #bikeaccident #nellai #CCTV #tnrepublic pic.twitter.com/myLzLFgmea
— TNRepublicnews (@TNRepublicnews) November 14, 2024
இதையும் படிங்க: ஆட்டோ - டூவீலர் மோதல்: தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி.!