டீ இல்லை., தின்பண்டத்துக்கு காசு கொடுக்கணுமா? - பேக்கரி கடையில் சரமாரி தாக்குதல்., போதை கும்பலை கையும் களவுமாக பிடித்த போலீஸ்.!
மதுபோதையில் இளைஞர் கும்பல் பேக்கரி கடை பணியாளர்களை தாக்கிய சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில், பொன்ராஜ் என்பவருக்கு சொந்தமாக பேக்கரி ஒன்று செய்யப்படுகிறது. நேற்று இரவு நேரத்தில், சுமார் 12 மணியளவில் ஊழியர்கள் கடையை அடைத்துக்கொண்டு இருந்தனர். அங்கு பணியில் 3 பேர் இருந்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: நவீன துப்பாக்கி, ஸ்கோப்புடன் வலம்வந்த நபர்; அதிர்ந்துபோன திருப்பூர் மக்கள்.. உண்மை இதோ.!
பணம் கேட்ட பணியாளர்கள்
அச்சமயம், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஐவர், போதையில் கடைக்கு வந்து டீ கேட்டிருக்கின்றனர். டீ காலியான காரணத்தால், டீ தீர்ந்துவிட்டது என கூறியுள்ளனர். மேலும், கடையில் இருந்த பொருட்களை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் சாப்பிட்ட பொருளுக்கு பணியாளர்கள் பணம் கேட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட ஊழியர்கள்
இதனால் போதை இளைஞர்கள் டீ இல்லை என சொல்லிவிட்டு, எதற்கு பணம் கேட்கிறாய்? என தகராறு செய்தனர். ஒருகட்டத்தில் கடை ஊழியர்களை கும்பல் சரமாரியாக தாக்கியது. பதறிப்போன ஊழியர்களில் ஒருவர், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்கச் சென்றார். இதற்குள் கடையில் சிக்கிய ஊழியர்களை கும்பல் நொறுக்கியெடுத்தது.
காவல்துறையினர் என்ட்ரி
நல்வாய்ப்பாக அங்கு காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட, அவர்களிடம் பணியாளர் உதவிகேட்டார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் விரைந்து வந்து பேக்கரியில் தாக்குதலில் ஈடுபட்ட போதை கும்பலை கைது செய்து வீரபாண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், காயமடைந்த இளைஞர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
வீடியோ நன்றிஏபிபி நாடு
இதையும் படிங்க: 15 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை., கை-கால் கட்டிப்போட்டு கொள்ளை.. திருப்பூரில் பயங்கரம்., 3 பேர் கைது.!