62 வயது காமுகனால் 13 வயது சிறுமி பலாத்காரம்; கர்ப்பத்தால் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!
பள்ளிப்பேருந்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர், சிறுமியை பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவில் வசித்து வரும் 13 வயது சிறுமி, தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். சம்பவத்தன்று இவர் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் பெற்றோரால் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: பர்வத மலைப் பயணத்தில் சோகம்; கள்ளக்குறிச்சி நபர் மாரடைப்பால் மரணம்.!
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, பள்ளிப்பேருந்து உதவியாளரான நாகராஜன் (வயது 62), சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
போக்ஸோ வழக்கில் கைது
அவரின் மிரட்டலுக்கு பயந்த சிறுமியும், இதனை வெளியே யாரிடமும் கூறவில்லை. இதனால் நிலைமையை தனக்கு சாதகமாகியவர், தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் கருத்தரித்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் செய்யார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினர், நாகராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். கைதான நாகராஜன் சிறுமியின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.200 வேண்டாம்., ரூ.1000 கொடு.. திருநங்கைகள் அடாவடி வழிப்பறி., புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்.!