கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
விபச்சார விடுதிகளின் கூடாரமாக வேலூர்? சிக்கப்போகும் அரசியல்கட்சி புள்ளிகள், மாமூல் போலீசார்..!
வேலூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பிரதான பகுதிகளில் ஸ்பா, தங்கும் விடுதிகளில் விபச்சாரம் பிரபலமாக நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனுக்கு தொடர் புகார்கள் கிடைத்துள்ளன. இதனால் மேற்கூறிய விஷயம் குறித்து விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க அவர் சரக காவல்துறையினருக்கு உத்தரவிட்டு இருந்தார்.
வேலை தேடி வரும் இளம்பெண்களை குறிவைத்து கும்பல் ஒன்று மூளைச்சலவை செய்து விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும் புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அதன்பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, வேலூர், காட்பாடி, குடியாத்தம் பகுதியில் விபச்சாரம் 29 விடுதிகளில் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: 17 வயது மாணவியுடன் உல்லாசம்.!! போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கூலித் தொழிலாளி.!!
வேலைதேடிவரும் பெண்கள் டார்கெட்
வேலூரில் பாபுராவ் வீதி, காகித பட்டறை, காட்பாடி அம்முண்டி, குடியாத்தம் பகுதியில் தங்கும் விடுதிகளில் விபச்சார விடுதிகள் செயல்பட்டு வந்துள்ளன. இதில் அதிமுக, திமுக பிரமுகர்கள் நடத்தும் தங்கும் விடுதிகளும் இடம்பெற்றுள்ளன. பிற மாநிலத்தில் இருந்தும், வேலை தேடிச் செல்லும் பெண்களை குறிவைத்து வாட்சப் குழு அமைத்து விபச்சாரத் தொழில் நடைபெற்றுள்ளது.
உள்ளூரில் காவல்துறையினருக்கு கையூட்டு வழங்கியும் தொழில் நடைபெற்ற நிலையில், தற்போது உயர் அதிகாரிகள் நேரடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள நிலையில், மாமூல் வாங்கியோரின் விபரமும் சேகரிக்கப்பட்டு அவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: காந்த குரலில் கவர்ச்சி பேச்சு.. சல்லாப எண்ணத்துடன் சென்ற தொழிலதிபரை கற்பழித்து கபளீகரம் செய்த கும்பல்..!