கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஒருதலைக்காதலால் சோகம்; 31 வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, புலவர் பூசாரி தெருவில் வசித்து வருபவர் சதிஷ் குமார் (வயது 31). இவர் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், பெண்மணி அவரை விரும்பாத நிலையில், காதலை தெரிவித்தும் பலனில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் தொடர்ந்து மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: குடிகார மகனை கட்டையால் அடித்துக்கொன்ற தந்தை உடல்நலக்குறைவால் மரணம்; அடுத்தடுத்து சோகம்.!
தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சதிஷ் குமார், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து சதீஷின் தந்தை சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சதிஷ் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மது பழக்கத்திற்கு அடிமையானதால் ஆத்திரம்.!! மகனை அடித்து கொலை செய்த தந்தை.!!