"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
நகைக்காக தம்பதிகள் கொல்லப்பட்ட விவகாரம்; 2 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகள் கைது.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜகோபால் (வயது 75). இவர் ஓய்வு பெற்ற நூற்பாலை நிறுவன மேலாளர் ஆவார். ராஜகோபாலின் மனைவி குருபாக்கியம் (வயது 68).
தம்பதிகள் கொலை
தம்பதிகள் இருவரும் கொலை செய்யப்பட்டு, நகைகள் திருடி செல்லப்பட்டது. கடந்த 2022 ஆம் வருடம் இந்த கொலை சம்பவம் நடந்த நிலையில், ராஜபாளையம் நகரமே பெரும் அச்சத்தில் ஆழ்ந்தது. மேலும், கொலை செய்த நபர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி, தடையத்தை அழித்து அங்கிருந்து சென்றனர்.
இதையும் படிங்க: திருப்பூர்: பெற்றோரை பார்க்க வந்த இடத்தில் கொடூரம்.. பெற்றோர்-மகன் கொலை வழக்கில் கண்ணீர் சோகம்.!
2 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகள் கைது
கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக அதிகாரிகள் சார்பில் தீவிர நடவடிக்கை மற்றும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முத்துக்குமார் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அப்போது, முத்துக்குமார் தான் நகைகளை வைத்திருப்பதாக கூறி அதிகாரிகளுடன் நிகழ்விடத்திற்கு செல்ல அழைத்துச் செல்லப்பட்டார்.
6 பேர் கைது
அப்போது அவர் திடீரென தப்பிச்சென்ற நிலையில், மதில் சுவரை ஏறிக்குதித்ததில் அவரின் கால்கள் உடைந்தன. இதனையடுத்து, அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி செய்த பின், காவல்துறையினரிடம் மேற்கூறிய தம்பதியை நகைக்காக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில், முத்துக்குமாரின் மனைவி தேவி, ரமேஷ், மதன், சதீஷ், சங்கிலி பாண்டி ஆகியோருக்கும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: #Big Breaking: தாய்-தந்தை, மகன் கொடூர கொலை.. தமிழகமே அதிர்ச்சி.. பல்லடத்தில் துயரம்.!