#Big Breaking: தாய்-தந்தை, மகன் கொடூர கொலை.. தமிழகமே அதிர்ச்சி.. பல்லடத்தில் துயரம்.!
தோட்டத்து வீட்டில் இருந்த மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், அவிநாசிபாளையம், சேமலைக்கவுண்டம்பாளையம், வலுப்பூரம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் தெய்வ சிகாமணி. இவரின் மனைவி அலமாத்தம்மாள். தம்பதிகள் இருவரும் முதிய தம்பதிகள் ஆவார்கள்.
இதையும் படிங்க: பிஞ்சு குழந்தை படுகொலை... முறை தவறிய உறவால் விபரீதம்.!! காதலானுக்கு வலை வீச்சு.!!
தோட்டத்து வீடு
இவர்களுக்கு செல்வ குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் மூவரும் தோட்டத்து வீட்டில் வசித்து வந்துள்ளனர் இதனிடையே, இன்று காலை தோட்டத்தில் வேலை பார்த்து வரும் நபர், தம்பதிகளின் வீட்டிற்கு சென்றபோது, அவர்கள் கொலை செய்யப்பட்டு இருந்துள்ளனர்.
மூவரும் கொலை
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நபர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் விசாரணை
முதற்கட்ட விசாரணையில் தம்பதிகள் நகை, பணத்திற்காக கொலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. தொட்டது வீட்டில் தங்கியிருந்தவாறு விவசாய பணிகளை மேற்கொண்டு வந்த தம்பதி மற்றும் அவரின் மகன் கொலை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்த பல்லடம் டிஎஸ்பி சுரேஷ், நேரில் வந்து விசாரணை நடத்துகிறார்.
இதையும் படிங்க: மகனின் பிறந்தநாளில் தந்தை கொடூர கொலை; முன்விரோதத்தால் இரும்பு கம்பியால் அடித்து பயங்கரம்.!