கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மதுபழக்கத்தை கண்டித்த மனைவி; தீக்குளித்து உயிரைவிட கணவன்.!
போதைக்கு அடிமையான கணவரை மனைவி கண்டித்து வந்த நிலையில், இறுதியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் பாண்டி (வயது 39). இவரின் மனைவி சுபாஷினி. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதையும் படிங்க: கனவாய் போன வெளிநாட்டு வேலை.. கழுத்தை நெரித்த கடன் தொல்லை.!! வாலிபரின் சோக முடிவு.!!
குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாண்டி, எப்போதும் போதையிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் குடும்பம் மிகவும் வருமானையான சூழலை எதிர்கொண்டுள்ளது.
போதை பழக்கத்தால் சண்டை
இதனிடையே, கணவரின் மதுபழக்கத்தை சுபாஷினி அவ்வப்போது கண்டித்து வந்துள்ளார். இதனால் தம்பதிகளுக்கு அடிக்கடி குடும்பச் சண்டை நடந்துள்ளது.
தீக்குளித்து தற்கொலை
இந்நிலையில், சம்பவத்தன்று மனைவி கண்டித்ததால் மனமுடைந்துபோன பாண்டி, உடலில் மண்ணெணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: மரணத்தில் முடிந்த லிவிங் டுகெதர் உறவு.!! ஆசிரியைக்கு நேர்ந்த துயர முடிவு.!!