#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரோபோ ஷங்கரின் மகள், பிகில் பாண்டியம்மாவா இது!! வித்தியாசமான போட்டோஷூட்டால் அசத்தல்!கண்கலங்கும் நெட்டிசன்கள்!
அட்லி இயக்கத்தில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிகில். இதில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் பெருமளவில் பேசப்பட்டவர் தொலைக்காட்சி நடிகரும் பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா.
இவர் தனது முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. மேலும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் சமீப காலமாக தெய்வமாக மதிக்கக்கூடிய பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருமளவில் அதிகரித்து வரும் நிலையில், அதனை வேதனையுடன் வெளிப்படுத்தும் விதமாக இந்திரஜா தற்போது வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் பாராட்டை பெற்று பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.