பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிரபல நடிகை ஒரு லெஸ்பியனா? பரபரப்பை ஏற்படுத்தும் MeToo விவகாரம்!
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப்பிள்ளை படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. தற்போது பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான போராட்டங்கள் வலுபெற்றுவரும் நிலையில் இயக்குனர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை அளித்ததாக தனுஸ்ரீதத்தா குற்றம் சாட்டினார்.
ஆனால் தனுஸ்ரீ கூறிய புகாரை அந்த படத்தில் அவருடன் நடித்த நடிகை ராக்கி சாவந்த் மறுத்ததுடன், மேலும் தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் என்றும் புகார் அளித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக ராக்கி சாவந்துக்கு எதிராக ரூ 10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார். இதற்கு பதிலடியாக ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடரப் போவதாக தனுஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் ராக்கி சாவந்த் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன் என்றும், போதைக்கு அடிமையானவர் என்றும் கூறினார், மேலும் ஒரு பார்ட்டியில் தன்னிடம் தனுஸ்ரீதத்தா லெஸ்பியன் உறவு கொள்ள முயன்றதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்,
இது குறித்து பதில் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா கூறுகையில்,நான் அப்படி பட்டவள் அல்ல. நான் போதை மருந்துக்கோ அல்லது குடிப்பழக்கத்திற்கோ அடிமை இல்லை என்றும் மேலும் நான் லெஸ்பியன் இல்லை, எனது புகாரை திசை திருப்பவே இவ்வாறு செய்கிறார்கள் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.