#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இனிமேல் சினிமால நடிக்க மாட்டாரா சமந்தா.? அட்வான்ஸ் தொகையை திருப்பி செலுத்தியதாக தகவல்.!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் சமந்தா. சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த இவர் மயோசைட்டிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிறிது காலம் ஓய்வு எடுத்து பின்னர் மீண்டும் தன்னுடைய நடிப்பு பணிகளை தொடங்கினார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சாகுந்தலம் என்ற திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. சமந்தாவின் நடிப்பு கேரியர் முடிந்து விட்டது என சினிமா விமர்சகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
தற்போது இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துக் கொண்டிருக்கும் குஷி திரைப்படமும் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளை எட்டி இருக்கிறது. மேலும் இவர் நடித்துவரும் சிட்டாடல் என்ற இணையதள தொடரின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து தற்காலிகமாக சமந்தா ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த முடிவை தொடர்ந்து புதிய படத்திற்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் தயாரிப்பாளருக்கு திருப்பி செலுத்தி விட்டதாக தெரிகிறது. அவரை தாக்கியிருந்த மயோசைட்டிஸ் நோய் குணமடைந்து ஒரு வருடங்களான நிலையில் மீண்டும் சமந்தா சிகிச்சைக்கு செல்கிறாரா? அல்லது தற்காலிகமாக ஓய்வு எடுக்கிறாரா? என்று சினிமா வட்டாரங்களில் பல செய்திகள் நிலவி வருகிறது. இந்த ஓய்விற்கு பிறகு புத்துணர்வுடன் வர இருக்கும் சமந்தாவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.