#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அந்த சர்ச்சை பதிவு! ஹேக் செய்யப்பட்டதா சமந்தாவின் இன்ஸ்டாகிராம்?? மேனேஜர் தந்த விளக்கம்!
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். நடிகை சமந்தாவிற்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகை சமந்தா தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் இறுதியாக விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த கதிஜா கதாபாத்திரம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. மேலும் சமந்தா கைவசம் தற்போது யசோதா, குஷி உள்ளிட்ட பல படங்கள் உள்ளது.
மேலும் நடிகை சமந்தா சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தமில்லாத நண்பர் ஒருவரின் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. அதை கண்ட ரசிகர்கள் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கூறி வந்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்த சமந்தாவின் மேனேஜர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படம் தவறுதலாக பதிவாகியுள்ளது. பின்னர் வல்லுநர்களின் உதவியுடன் அந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் கூறி இருந்தார். மேலும் தற்போது சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.