#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதன் முறையாக வெளியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா புகைப்படம் - வைரலாகும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவர் வல்லவர்.
சமீபத்தில் தமிழில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக தனது திறமையை வெளிப்படுத்தினார். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து சர்வதேச அரங்கில் கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனையாக அந்த படத்தில் இவர் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாக நடித்துள்ளார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைபடத்திற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.