#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் 63 படத்தில் இந்த பாலிவுட் நடிகரும் நடிக்கிறாரா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
தெறி, மெர்சலை தொடர்ந்து விஜய் அட்லீயுடன் கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.
மேலும் விஜய் 63 படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான படிப்பிடிப்புகள் சென்னையின் பல இடங்களும் தீவிரமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்து நடிக்கவுள்ளார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
We are happy to welcome #JackieShroff Sir on board #Thalapathy63 😊 pic.twitter.com/S4M67WZ9RP
— Archana Kalpathi (@archanakalpathi) 21 March 2019