#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செம ட்ரீட்! வெளியானது சூர்யாவின் ஜெய்பீம் பட டீசர்! கொண்டாடும் ரசிகர்கள்!!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படைத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இதனை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
பழங்குடி பெண்ணிற்கு நேர்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் ஜெய் பீம் திரைப்படம் தீபாவளி விருந்தாக அடுத்த மாதம் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. மேலும் இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.