#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதக்கூடவா கவனிக்காம டிரஸ் போடுவீங்க? நடிகை ஜான்வி கபூரின் வைரல் வீடியோ!
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல சினிமா தயாரிப்பாளருமான போனி கபூரின் முதல் மகள் ஜான்வி கபூர் புதிதாக வாங்கிய உடையால் நெட்டிசன்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
ஜான்வி கபூர் கடந்த வருடம் 'தடக்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார் ஜான்வி. குறிப்பாக இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான போர் வீராங்கனை கஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்று படமான தி கார்கில் கேர்ல் என்ற படத்தில் ஜான்வி கதாநாயகியாக நடித்துவருகிறார்.
இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே வரும் ஜான்வி புதிதாக வாங்கிய உடையின் துப்படாவில் இருக்கும் விலை அட்டையைக்கூட பிய்த்து போடாமல் விலை அட்டையுடன் உடை அணிந்து வெளியே கிளம்பும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
விலை அட்டை இருப்பதை கூடவா மறந்துட்டு உடை அணிவீங்க என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.