பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நடிகை ஜெயஸ்ரீ! உயிர் தோழியான ரோஷ்மாவை பார்த்து திரும்ப திரும்ப கூறிய பதிவு!
சின்னத்திரை நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ சில தினங்களுக்கு முன்பு தனது கணவர் ஈஸ்வர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதாவது தனது கணவர் மகாலட்சுமி என்ற சீரியல் நடிகையும் தொடர்பில் இருப்பதாகவும், தனது குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டாதாகவும் புகார் செய்தார்.
இதனால் ஈஸ்வர் கைது செய்யப்பட்டார். பின்னர் வெளியே வந்த ஈஸ்வர் ஜெயஸ்ரீ மீது அடுக்கடுக்காக புகார்கள் பலவற்றை கூறினார். இந்நிலையில் தற்போது ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவரது உயிர் தோழியான ரோஷ்மாவுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் நான் ஏமார்ந்து விட்டேன். என்னை ஏமாற்றி விட்டனர். என்னை மன்னித்துவிடு. நீ எனக்கு ஒரு நல்ல தோழி என்று கூறி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதனை கேட்டு உடனே தான் அவருக்கு போன் செய்ததாகவும் கூறியுள்ளார்.
அப்போது தான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. அவரை நேரில் சென்று பார்த்த ரோஷ்மாவிடம் ஜெயஸ்ரீ திரும்ப திரும்ப தனது மகள் நண்ணுவை பார்த்து கொள் என்று மட்டுமே கூறியதாக ரோஷ்மா கூறியுள்ளார்.