பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகும் ஜான்வி கபூர்.. அசத்தல் அப்டேட்!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மிகவும் பிரபலமானவர். இதனிடையே பாலிவுட் சினிமாவுக்கு சென்று அங்கேயும் தனது புகழை நிலை நாட்டினார்.
இதனிடையே பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் உடல்நலக்குறைவாழ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் பாலிவுட் திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகின்றனர். மேலும், அவர்களுக்கு தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து நடிகை ஜான்வி கபூர் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் தற்போது ராம் சரணுக்கு ஜோடியா ஒரு திரைப்படத்திலும், ஜூனியர் என்டிஆர்க்கு ஜோடியாக ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகியுள்ளார்.