#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படத்துக்கு இப்படியா விளம்பரம் செய்வது? விஜய் சேதுபதியை திட்டி தீர்க்கும் பொதுமக்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ஒரு காதல் காவியமாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. தற்போது சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
இந்நிலையில் இன்று காலை சென்னை முழுவதும் வித்தியாசமான போஸ்டர் ஓன்று ஒட்டப்பட்டிருந்தது. அதில் ----- போட பொண்ணு வேணும் என்று மட்டும் எழுதியிருந்தது. இது என்ன போஸ்டர் என தெரியாமல் குழம்பினார் மக்கள். போஸ்டரில் இருந்த வாக்கியம் படு ஆபாசமாக இருந்ததால் இதுபற்றிய செய்தி சரசரவென்று பரவியது.
இந்நிலையில் அது ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ என்ற படத்தின் போஸ்டர் அது என்பதும் அப்படத்தை பி.ஆனந்தராஜன் என்பவர் இயக்குவதாகவும் அதன் ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிய வந்திருக்கிறது.
கடலை போட பொண்ணு வேணும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என பேசி வருகின்றனர் ரசிகர்கள். படத்துக்கு இப்படியெல்லாம் கூட விளம்பரம் தேடுவார்களா என மறுபக்கம் படக்குழுவை திட்டி வருகின்றனர் பொதுமக்கள்.