#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதல் முறையாக வெளியான நிஷா மற்றும் காஜல் அகர்வாலின் சிறுவயது புகைப்படம்! அப்பவே எவ்வளவு அழகுனு பாருங்க
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். பரத் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான காஜல் அகர்வால் இன்று விஜய், அஜித், கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் வெகுவாக வாய்ப்புகள் குறைந்தாலும் இயக்குனர் சங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடிக்கின்றார் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வாலின் பிறந்தநாள் நேற்று ஜூன் 19ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் காஜல் அகர்வாலுக்கு சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வால் தனது சகோதரியின் பிறந்தநாளுக்கு சிறுவயது புகைப்படத்தினை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் தங்களது அழகால் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் காஜல் மற்றும் நிஷா அகர்வால் சிறு வயதிலேயே எப்படி அழகாக உள்ளார்கள் என்பதை பாருங்கள்.