என் உயிர்.. இனி எல்லாமே எனக்கு அவர்தான்.! உச்சகட்ட ஹேப்பியில் நடிகர் காளிதாஸ் ஜெயராம்.!



kalidass jayaram interview about his future husband

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக வலம் வந்தவர் ஜெயராம். இவர் தமிழில் முறைமாமன், தெனாலி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அவரது மகன் காளிதாஸ். அவரும் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் காளிதாஸ், பிரிட்டிஷ் மாடல் அழகியான தாரணி என்பவரை காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் அண்மையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த காளிதாஸ், தாரணியுடனான தனது காதல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Kalidas jayaram

அப்பொழுது அவர், நான் முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வந்தேன். தாரணியை காதலிப்பேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. அதனால் இருவருக்கும் நன்றாக செட்டாகி விட்டது. காதல் விஷயத்தை வீட்டில் எப்படி சொல்வது என பயந்து கொண்டே இருந்தேன்.

அப்பொழுது காரில் ப்ளூடூத் வழியாக அவளிடம் பேசிக் கொண்டிருந்ததை எனது தங்கை கேட்டுவிட்டு வீட்டில் கூறி விட்டார். என் காதல் விஷயம் தெரிந்தவுடன் யாரும் கோபப்படவில்லை. உடனே எனது அப்பா சம்மதம் தெரிவித்து விட்டார் . தாரணிதான் எனது உயிர். எனக்கு எல்லாமே அவர்தான் என கூறியுள்ளார்.