பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இதனால்தான் நான் நடிப்பதை விட்டுவிட்டேன்! முதன்முறையாக மனம்திறந்த நடிகை கல்யாணி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் அள்ளித்தந்த வானம், ஜெயம் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் கல்யாணி. இவர் அதனை தொடர்ந்து கத்திக்கப்பல், இன்பா, இளம்புயல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பின்னர் சின்னத்திரைக்கு தாவி பிரிவோம் சந்திப்போம், அண்ணாமலை, தாயுமானவன், ஆண்டாள் அழகர் உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
இந்நிலையில் திடீரென அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் என்பவரை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டிலானார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண்குழந்தை உள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் இருக்கும் கல்யாணி, அவர் நடிப்பில் இருந்து விலகியது ஏன் என முதன் முறையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நான் கதாநாயகியாக நடித்தபோது பெரிய நடிகர்.பெரிய தயாரிப்பாளர் படம். உங்கள் மகள்தான் ஹீரோயின். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று எனது அம்மாவிற்கு போன்கால் வரும். எனது அம்மாவும் அட்ஜஸ்ட்மென்ட் என்றால் தேதி சம்பந்தப்பட்டது என நினைத்து ஓகே சொல்லிவிடுவார். பின்னர் அதற்கான அர்த்தம் தெரிந்தபின், அந்த வார்த்தையை கேட்டாலே போனை கட் பண்ணிவிடுவார்.
மேலும் நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியபோது உயர்பொறுப்பில் இருந்த ஒருவர், என்னை இரவில் பப்புக்கு அழைத்தார். நான் மாலையில் காப்பி ஷாப்பில் சந்திக்கலாம் என்று கூறினேன். அவ்வளவுதான். பின் எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்கவே இல்லை.திறமைக்கு இடமில்லை. அதனாலேயே நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கல்யாணி கூறியுள்ளார்.