#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விக்ரம் பட ரோலக்ஸ்க்கு தேடிச்சென்று கமல் கொடுத்த அசத்தலான பரிசு.! என்னனு பார்த்தீர்களா?? வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம்.
இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என பல முன்னணி பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று 3 தினங்களில் உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு நேற்று விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக வழங்கினார். விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மூன்று நிமிடமே வந்தாலும் அவர் நடித்த காட்சிகள் திரையரங்கையே அதிர வைத்தது.
A moment like this makes life beautiful! Thank you Anna for your #Rolex! @ikamalhaasan pic.twitter.com/uAfAM8bVkM
— Suriya Sivakumar (@Suriya_offl) June 8, 2022
இந்த நிலையில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு கமல் 'ரோலக்ஸ்' கைக்கடிகாரத்தை இன்று பரிசளித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இப்படி ஒரு தருணம் என் வாழ்க்கையை அழகாக்குகிறது. உங்கள் ரோலக்ஸுக்கு நன்றி அண்ணா என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.