அம்மாடியோவ்.. இத்தனை கோடியா?? உலக நாயகன் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?? பரவும் தகவல்!!



kamal haasan property details viral

கலைக் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் கமல் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் ஹீரோவாக அவதாரமெடுத்து ஏராளமான சூப்பர் ஹிட் மற்றும் மாஸ் திரைப்படங்களில் நடித்து தற்போது உலகநாயகனாக வலம் வருகிறார். நாடு முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் இதுவரை 230க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் நடிப்பு மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், கதாசிரியர் என பன்முக திறமை கொண்டு விளங்கி வருகிறார். நடிகர் கமல் ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற பெயரில் அடுத்தடுத்ததாக படங்களை இயக்கி வருகிறார். அவர் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

         kamal

இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் பரவி வருகிறது. அதாவது நடிகர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.388 கோடி வரை இருக்கும் என தகவல்கள் பரவி வருகிறது. மேலும் நாடு முழுதும் சொத்துக்களை வைத்திருக்கும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூபாய் 130 கோடி சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.