புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சபாஷ்... மீண்டும் வருகிறார் வேலு நாயக்கர்... நாயகன் திரைப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் எப்போது.?
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா பொன்வண்ணன், டெல்லி கணேஷ் மற்றும் ஜனகராஜ் ஆகியோரின் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன்.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்தத் திரைப்படத்தில் வேலு நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் கமல்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வரதராஜ முதலியார் என்ற தாதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட நாயகன் திரைப்படம் பல விருதுகளையும் வென்றது. இந்தத் திரைப்படம் மணிரத்னம் மற்றும் கமல் ஆகியோருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது.
இந்நிலையில நாயகன் திரைப்படம் வெளியாகி 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ரிலீசாக இருக்கிறது. ஃபிலிம் ரோல்களில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு நவீன ஒலி அமைப்புடன் நவம்பர் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தினை எஸ்பி ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனம் ரீ ரிலீஸ் செய்கிறது