#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆத்தாடி! இவ்வளவு நாள் இல்லாமல் இப்போ இப்படியொரு ஆசையா? வெளிப்படையாக போட்டுடைத்த தாம்தூம் நாயகி!
பாலிவுட்டில் கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கணா ரணாவத் .இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் பாலிவுட்டில் ஏராளாமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கிறார்.
மேலும் அவர் தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்லவரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் கங்கனா ரணாவத் பேட்டிஒன்றில் கூறியதாவது, திருமணம் குறித்து எனக்கு வேறு அபிப்பிராயமே இருந்தது. குழந்தை பெற்றுக்கொள்ளத்தான் அனைவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என நினைத்தேன். இதனால் திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லாமல் இருந்தேன். ஆனால் தற்போது அந்த எண்ணம் மாறியுள்ளது.
தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. மேலும் அதற்காக விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளேன். எனக்கு அதிகமாக கோபம் வரும். நான் எப்போது கோபப்பட்டாலும் அதில் நல்லதுதான் நடந்துள்ளது. சினிமா துறையில் எனக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். வேறு யாருக்கும் இந்த அளவுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.