பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நண்பனின் வீட்டில் பதுங்கி இருந்த டிடிஎஃப் வாசன் அதிரடி கைது..
யூட்யூபில் விலை உயர்ந்த பைக்குகளை வைத்து சாலையில் சென்று அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டு பிரபலமானவர்தான் டிடிஎஃப் வாசன். இவருக்கு பல 2k கிட்ஸ் ரசிகர்களாக உள்ளனர். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் டிடிஎஃப் வாசன் தற்போது மிகப்பெரும் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து கூறப்படுவதாவதி, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் டிடிஎஃப் வாசன் சென்று கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலான நெடுஞ்சாலையில் வீலிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறி அதிவேகமாக பைக் கீழே சரிந்து டிடிஎஃப் வாசனுக்கு கை எலும்பு முறிந்தது.
இதனால் அவசர சிகிச்சையில் வாசனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டி டி எப் பலரும் சமூக வலைத்தளங்களில் திட்டி கமெண்ட் செய்து வந்தனர். மேலும் பல பிரபலங்களும் இவரின் இந்த செயலை கண்டித்து பதிவு செய்தனர்.
இதனை அடுத்து தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதன் பின்னாவது எந்த விபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பது இணையவாசிகளின் கருத்து.