#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொலை வழக்கில் சிக்கிய நடிகரை காண ஆட்பறித்து அலப்பறை செய்த ரசிகர்கள்..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சேர்ந்த நடிகர் தர்ஷனின் ரசிகர், நடிகரின் பெண் தோழிக்கு தொந்தரவு கொடுத்த காரணத்தால் கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவரின் மகனும், கன்னட மொழியில் வெளியான 60 க்கும் அதிகமான படங்களிலும் தர்ஷன் நடித்து இருந்தார்.
கொலை வழக்கில் சிறையில் அடைப்பு
கொலை குற்றவழக்கில் சிக்கிய தர்ஷன் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு அவர் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்து, பெல்லாரி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவரின் தோழி பவித்ரா கௌடா பெங்களூர் பெண்கள் சிறையில் இருக்கிறார். இதனிடையே, பெல்லாரி சிறையில் இருக்கும் தர்ஷன் முதுகு வலி காரணமாக பெல்லாரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
சிகிச்சைக்கு வந்த நடிகரை காண ஆட்பறித்த ரசிகர்கள்
இந்த தகவல் அறிந்த அவரின் ரசிகர்கள் பலரும் மருத்துவமனைக்கு முன்பு குவிந்த நிலையில், தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து தங்களின் கூக்குரலை எழுப்பி இருந்தனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தர்ஷன் ரசிகரை கொலை செய்த விவகாரத்தில், அவரின் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு, மின்சாரம் பாய்ச்சப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அச்சச்சோ.. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்-க்கு என்ன ஆச்சு?.. மருத்துவமனையில் அனுமதி..! சோகத்தில் ரசிகர்கள்.!
Kannada actor #Darshan Thoogudeepa, who is currently in judicial custody at #BellaryJail, was shifted to the Vijayanagara Institute of Medical Sciences (#VIMS) in Bellary for a medical examination. The actor reportedly complained of severe back pain, prompting authorities to… pic.twitter.com/qf7cmHRSFp
— Madhuri Adnal (@madhuriadnal) October 22, 2024
இதையும் படிங்க: வேட்டையன் படத்தில் டெலீட் செய்யப்பட்ட ரஜினி - பகத் பாசில் காட்சிகள்; வீடியோ உள்ளே.!