பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வானொலி தொகுப்பாளர், நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.. உடல் உறுப்புக்கள் தானம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஜெ.பி நகரில் வசித்து வரும் துணை நடிகை ரச்சனா (வயது 39). இவர் கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும், வானொலி தொகுப்பாளராகும் பணியாற்றி இருக்கிறார்.
கடந்த 2013 ஆம் வருடம் கன்னட மொழியில் வெளியான "சிம்பிள் ஆகி ஒன் லவ் ஸ்டோரி" படத்தில் நடிகர் ரக்சித் ஷெட்டியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை துணை நடிகை ரச்சனா தனது வீட்டில் இருக்கையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ள நிலையில், அவரிடம் இருந்து உடல் உறுப்புக்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.