#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அன்று முன்னணி ஜாம்பவான்களுடன் குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர்.. இன்று ஐஏஎஸ் அதிகாரி.! இவர் யார்னு தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!!
கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்தவர் கீர்த்தனா. 4 வயதில் நடிக்க துவங்கிய அவர் கன்னட சினிமாவில் டாப் ஸ்டார்களாக வலம் வந்த அம்பரீஷ், விஷ்ணுவர்தன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல ஹீரோக்களின் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இவர் சினிமாவில் சுமார் 32 திரைப்படங்கள் மற்றும் 48 தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாக இருந்துள்ளார்.சிறுவயதில் நடிப்பில் ஆர்வம் காட்டிய அவர் வளர்ந்த பின்பு படிப்பில் கவனம் செலுத்தினார். தனது தந்தையின் விருப்பப்படி கேஏஎஸ் எனும் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்று 2011ல் அரசு அதிகாரியானார்.
பின்னர் யுபிஎஸ்சி தேர்வில் தனது கவனத்தை செலுத்தி அவர் 6வது முயற்சியில் 167வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரியானார். பயிற்சி முடித்து அவர் தற்போது கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் உதவி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் தான் சிறப்பாக பணியாற்ற மக்களின் ஒத்துழைப்பு தேவை எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.