கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் டார்கெட்? இளைஞரின் அதிர்ச்சி செயல்.. பெண்களே உஷார்.!
தனியே வீட்டில் இருந்த பெண்ணுக்கு மயக்க ஸ்ப்ரே அடித்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மைலோடு பகுதியில், இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனியாக வீட்டில் இருந்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: குமரியில் அதிர்ச்சி... ஆபாச படம் எடுத்து கல்லூரி மாணவிக்கு மிரட்டல்.!! இளைஞர் கைது.!!
அப்போது, சற்றும் எதிர்பாராத வேளையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் பெண்ணின் முகத்தில் மயக்க ஸ்ப்ரே அடித்துள்ளார். இதனால் அவர் மயங்கி இருக்கிறார்.
நகை கொள்ளை
உடனடியாக பெண்ணின் வீட்டில் இருந்த இரண்டரை சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்ட திருடன், பெண்ணை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
மயக்கத்தில் இருந்து எழுந்த பெண்மணி வீட்டில் நகை கொள்ளைபோயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, பின் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து, திருடனுக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: உதவி கேட்டு வந்த பெண் பலாத்காரம், கொலை மிரட்டல்.!! வக்கீல் மீது பரபரப்பு புகார்.!!