கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
காதலில் விழுந்த தோழி.. மனஉளைச்சலில் சக மாணவி எடுத்த விபரீத முடிவு.. குமரி அருகே பரிதாபம்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை பகுதியில் வசித்து வருபவர் அபிநயா (வயது 17). இவர் அங்குள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி கபாடி வீராங்கனையாகவும் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம், அங்குள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு சென்ற நிலையில், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காவல்துறையினர் விசாரணை
பின் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை முன்னெடுத்தனர். மேலும், அவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அக்கம் பக்கத்தினரிடம் பேசக்கூடாது; தாய் கண்டித்ததால் 14 வயது சிறுமி தற்கொலை.!
தோழியின் காதல்
இதனிடையே, அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அபிநயா சக மாணவியிடம் நெருங்கிய தோழியாக இருந்து வந்துள்ளார். அபிநயாவின் தோழிக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர்கள் காதல் வயப்பட்டுள்ளனர். இதனால் காதல் ஜோடி நீண்ட நேரமாக உரையாடி வந்துள்ளது.
நட்புக்காக ஏங்கி சோகம்
தோழி அபிநயாவுடன் பேசுவதை தொடர்ந்து வந்த காரணத்தால், மனமுடைந்த அபிநயா தொட்டிபாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கணவன் - மனைவி சண்டையால் விரக்தி; இரயில் முன் பாய்ந்து இளைஞர் மரணம்?.. சடலமாக மீட்கப்பட்ட உடல்.!