காலாவதியான குளுக்கோஸ் செலுத்தப்பட்டதால் சோகம்; கர்ப்பிணி பெண் பலி.!



  in West Bengal Midnapore Medical College Glucose death 

மருத்துவ சிகிச்சையில் அனுமதியான பெண்ணுக்கு, காலாவதியான குளுக்கோஸ் செலுத்தப்பட்டதால், அவர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள மித்னாபூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சம்பவத்தன்று பிரசவத்திற்காக இளம்பெண் ஒருவர் அனுமதியாகி இருந்தார். 

பெண்மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து இருந்த நிலையில், அவர் குழந்தையை பிரசவித்து இருக்கிறார். இதனிடையே, அவருக்கு சிகிச்சையின்போது குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இதையும் படிங்க: சிறுமியின் மீது விழுந்த இளைஞர்.. தலையில் காயமடைந்து, மூக்கு உடைந்து பரிதாப மரணம்.!

death

காலாவதியான குளுக்கோஸ்?

அப்போது, அவர்கள் காலாவதியான குளுகோஸை பயன்படுத்தியதாக கூறப்படும் நிலையில், இதனால் தீவிர உடல்நலக்குறைவை எதிர்கொண்ட பெண்மணி மரணம் அடைந்தார். 

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அலட்சியத்தால் சோகம்.. மின்மோட்டார் வயரை பிடித்த ஒன்றரைவயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி.!